Monday, January 31, 2011

அறிவியல் மாற்றங்கள்தான் எத்தனை.. எத்தனை...


அறிவியல் மாற்றங்கள்தான் எத்தனை.. எத்தனை....

என்னுடைய ஆருயிர் ஒன்றுவிட்ட சகோதரன் நஜீர் சொன்னதுபோல.....

“விஞ்ஞானம்.. உலகத்தை சுருக்கி... உறவுகளை பிரித்துவிட்ட சாதனம்.....”

அன்றெல்லாம்... காலை எழுந்தது முதல் மாலை வரை
வீட்டை விட்டு சென்ற பையன் எங்கே என்று அன்னையர் தேடுவார்கள்....

அடிக்கிற வெயில் எங்கே கீழே விழுந்தால் பூமி தாங்காது என்று எண்ணியோ என்னவோ
பையன்களும் பெண்டு பிள்ளைகளும்,  தெருவில் விளையாடுவார்கள்.....
பசி என்று ஒன்று இல்லையென்றால், வீட்டுக்கு வருவதற்கான எந்த ஒரு நோக்கமும் இருக்காது...

கிட்டுப்பிள்ளை, டயர் வண்டி, பளிங்கு, பம்பரம் என்று தெரு திருவிழா போல் இருக்கும்.....

இப்போதோ......

தெரு வெறிச்சோடிக் கிடக்கிறது....
பிள்ளைகள் எல்லாம் கான்வெண்டில் படிப்பதால் நிறைய வீட்டுப்பாடம் செய்ய வேண்டுமாம்....
பள்ளிக்கூட நேரம் போக இருக்கவே இருக்கிறது..... வீடியோ கேம்ஸ்... டிவி....
வீடே ஒரு ஜெயில்தான்....
உடற்பயிற்சி என்பது டிவியில் பார்ப்பதுதான்.....
நண்பர்கள் பேசிக்கொள்வது ’செல்’லில்தான்...
உறவுகள் என்றாலோ கேட்கவே வேண்டாம்.....

“விஞ்ஞானம்.. உலகத்தை சுருக்கி... உறவுகளை பிரித்துவிட்ட சாதனம்.....”

எனக்கு திரும்பவும் வாய்ப்பு கிடைத்து சிறுவயது கிடைத்தால் என்னுடைய பழைய வாழ்க்கையே வேண்டுமென்பேன்....
எனக்கு வேண்டாம் இந்த விஞ்ஞானம் சிறு வயதில்.......

ஏக்கத்துடன்,
ஃபரீஜ்

2 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்.
    மிகவும் எளிய முறையில் நச்சென்ற கருத்தை சொல்லி இருக்கீங்க...டியர்.
    இந்த ஏக்கம் இன்னும் எத்தனை பேருக்கோ...?

    அன்புடன்,
    அப்சரா.

    ReplyDelete
  2. Indha ekkam ettanai perukko? HELLO SISTER ANDHA EKKAMUM THAKKAMUM UNGAL AVARUKKU MATTUMALLA ENGALUKKUMTHAN.......

    ILAMAI NINAIVUGAL IDHAYATTIL VANTHADHAL
    THANIMAIYIL AZHUHIREN

    MEENDUM VARUMAA? ENNAI MEETTI THARUMAA
    ILAMAI PARUVAM.......

    ReplyDelete